

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை 45 நாட்களுக்கு பின் தொடங்கியது.
மதுரை மண்டலத்தில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதி களுக்கு 700 பேருந்துகளும், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்கள் அடங்கிய மதுரை கோட்டத்தில் 1,400 பேருந்துகளும் நேற்று இயக்கப்பட்டன.
50 சதவீத பயணிகள் மட்டுமே ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டது. நேற்று முதல்நாள் என்பதால் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. காய்ச்சல் பரிசோதனையும் மேற் கொள்ளப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் 75 சதவீத பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டன. விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூர், சிவகாசி, வில்லி புத்தூர், ராஜபாளையம் அரசு போக்குவரத்து பணிமனைகளில் மொத்தம் உள்ள 418 பஸ்களில் 358 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் பேருந்துகளும், தென் மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப் பட்டன. கரூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு தடையால் பஸ்கள் இயக்கப்படவில்லை. கொடைக்கானலுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அவசர மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு இ- பாஸ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.