Published : 29 Jun 2021 06:13 AM
Last Updated : 29 Jun 2021 06:13 AM

கரும்பு சாகுபடியில் நோய் மேலாண்மை விவசாயிகளுக்கு நாளை இணையவழி பயிற்சி :

நாமக்கல்: கரும்பு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு இணைய வழியில் நாளை பயிற்சி அளிக்கப்பட உள்ளது, என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் என்.அகிலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ‌செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை (30-ம் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை கரும்பு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு இணைய வழியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் மண்வள அட்டை பயன்படுத்தி உரமிடல், ஒருங்கிணைந்த முறையில் ஊட்டச்சத்துக்களை அளிக்கும் முறைகள், பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்யும் முறைகள் குறித்து விரிவாக பயிற்சியளிக்கப்படும்.

மேலும், கரும்பு பயிரை தாக்கும் முக்கிய பூச்சிகள், நோய்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்தும் விரிவாக விளக்கிக் கூறப்படும்.

இதில் பங்கேற்க ஆர்வமுள்ள விவசாயிகள் இணைய வழியாக ஜும் லிங்க்-ஐ பயன்படுத்தி பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரம் அறிய 04286 - 266345, 266650 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x