கடலில் தவறி விழுந்தமீனவரின் சடலம் மீட்பு :

கடலில் தவறி விழுந்தமீனவரின் சடலம் மீட்பு :

Published on

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடியைச் சேர்ந்த தினமணி(46), இவரது மகன் வசீகரன்(19), சக்திவேல் மகன் மணிகண்டன்(23) ஆகியோர் ஜூன் 26-ம் தேதி புதுக்குடி மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வசீகரன் கடலுக்குள் தவறி விழுந்துவிட்டார்.

அதன்பிறகு, மீனவர்கள் மற்றும் கடலோரக் காவல் படையினர் படகுகள் மூலம் தேடி வந்தனர். தேடுதல் பணியை தீவிரப்படுத்துமாறு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அலுவலர்களுக்கு அறிவுறுத் தினார்.

இந்நிலையில், 18 நாட்டிக்கல் மைல் தொலைவிலிருந்து வசீகரனின் சடலம் நேற்று மீட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in