2 நாட்களுக்கு முன் மாயமானவர்  லிப்ட் அடியில் சடலமாக கிடந்தார் :

2 நாட்களுக்கு முன் மாயமானவர் லிப்ட் அடியில் சடலமாக கிடந்தார் :

Published on

கரூர் தாந்தோணிமலை கணபதி பாளையம் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ்(52). இவர் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் தச்சுப் பணிகள் செய்து வந்தார்.

கடந்த 25-ம் தேதி வீட்டிலி ருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை அவரது மகன் மணி ராஜ் 2 நாட்களாக தேடி வந் தார். இந்நிலையில், வடக்கு முருகநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தனது தந்தையின் இருசக்கர வாகனம் நிற்பதை நேற்று பார்த்த மணிராஜ், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண் டார். அப்போது, அந்த வணிக வளாகத்தின் தரைத் தளத்தில் உள்ள லிப்ட்டின் அடிப் பகுதியில் இருந்து செல்போன் அழைப்பு சத்தம் வந்துள்ளது. இதையடுத்து மணிராஜ் அளித்த தகவலின் பேரில், கரூர் நகர போலீஸார் அங்கு சென்று லிப்ட்டின் அடிப் பகுதியைத் திறந்துப் பார்த்த போது, அங்கு அருள்ராஜ் சடலமாக கிடந்தார். இதையடுத்து சடலத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கரூர் நகர போலீஸார் விசாரித்து வரு கின்றனர். லிப்ட்டின் கீழ்பகு தியை சாதாரணமாக யாரும் திறக்க முடியாது. இதனால், அவர் அங்கு எப்படி சென் றார்? உயிரிழந்தது எப்படி? என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். மேலும் அங் குள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in