

திருச்சியில் 191 பேருக்கும், தஞ்சாவூரில் 244 பேருக்கும், திருவாரூரில் 60 பேருக்கும், நாகை, மயிலாடுதுறையில் 72 பேருக்கும், கரூரில் 46 பேருக்கும், புதுக்கோட்டையில் 69 பேருக்கும், பெரம்பலூரில் 23 பேருக்கும், அரியலூரில் 63 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், திருச்சியில் 228, கரூரில் 75, திருவாரூரில் 60, தஞ்சாவூரில் 321, நாகை, மயிலாடுதுறையில் 122, புதுக்கோட்டையில் 74, பெரம்பலூரில் 19, அரியலூரில் 61 என 966 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கரூரில் 3, திருச்சியில் 7, பெரம் பலூர், புதுக்கோட்டையில் தலா 1, அரியலூரில் 3, திருவாரூரில் 4 என 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார்.