50 சதவீத பயணிகளுடன் - இன்று முதல் அரசு பேருந்து சேவை தொடக்கம் : வரும் 1-ம் தேதி முதல் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு

வேலூர் பழைய பேருந்து நிலையத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்.
வேலூர் பழைய பேருந்து நிலையத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்.
Updated on
2 min read

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து இன்று முதல் 455 அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர் மண்டலத்தில் (வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டங்கள்) வேலூர் ரங்காபுரம், கொணவட்டம், கிருஷ்ணா நகர், ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், குடி யாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர், பேரணாம்பட்டு ஆகிய 10 இடங் களில் அரசு போக்குவரத்து பணி மனைகள் மூலம் மொத்தம் 245 நகரப் பேருந்துகள், 384 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 629 அரசுப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

கரோனா 2-வது அலை காரணமாக, கடந்த 48 நாட்களுக்கு மேலாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் அரசு போக்குவரத்துக் கழக வேலூர் மண்டலத்துக்கும் மட்டும் சுமார் 35 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்கு வரத்து கழக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

இந்நிலையில், கரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால் தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் போக்குவரத்து சேவை ஜூன் 28-ம் தேதி முதல் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளி யிட்டுள்ளது.

ஜூன் 28-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஜூன் 28-ம் தேதி (இன்று) திங்கள்கிழமை அதிகாலை முதல் அரசுப் பேருந்துகள் இயக்குவதற்கு பேருந்துகளும், பேருந்து நிலை யங்களும் தயாராக இருப்பதாக வேலூர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போக்கு வரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, "தமிழக அரசின் உத்தரவின் பேரில், கரோனா பரவல் குறைந்துள்ள மாவட்டங் களுக்கு வேலூரில் இருந்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து அரசு தடை விதித்துள்ள சேலம், கோவை, தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், நாகப்பட்டினம், நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களுக்கும், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் பேருந்து கள் இயக்கப்படாது.

இது தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும். தென் மாவட்டங் களான திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட் டங்களுக்கும் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

வேலூர் மண்டலத்தில் இருந்து முதற்கட்டமாக 227 நகரப் பேருந்து களும், 228 புறநகர் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வேலூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளும் இன்று அதிகாலை முதல் வழக்கம் போல் இயக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது’’ என்றனர்.

இன்று முதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் வேலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று மேற்கொண்டனர்.

அதேபோல், ஜூலை 1-ம் தேதி முதல் தனியார் பேருந்துகளை இயக்கவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in