போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் :

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இளைஞர்கள் பங்கேற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பேசும் காவல் ஆய்வாளர் பிரபாவதி.
சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இளைஞர்கள் பங்கேற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பேசும் காவல் ஆய்வாளர் பிரபாவதி.
Updated on
1 min read

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில் சேத்துப் பட்டு காவல் நிலைய ஆய்வாளர் பிரபாவதி பேசும்போது, “போதைக்கு அடிமை யாகி இளைஞர் சமுதாயம், தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர். பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து, அவர்களை வாழ்க்கையில் முன்னேற்ற பெற்றோர் அரும்பாடுபடுகின்றனர். பெற்றோரது உழைப்பை சிதைக்கும் வகையில், சமூக விரோத நட்புகள் மூலமாக போதைக்கு அடிமையாகி தவறான பாதைக்கு செல்கின்றனர்.

போதைப் பொருட்களை உட்கொள்வதால், உங்களது உடல் நலம் பாதிக்கும். எதிர்கால வாழ்க்கையே அழிந்து போகும். உங்களது தவறான பழக்கங்களால் குடும்பமும் பாதிக்கப்படும். போதைப் பழக்கத்துக்கு அடிமை யாகாமல் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க படும். இளைஞர்கள் எச்சரிக் கையாக செயல்பட்டு வாழ்க் கையில் முன்னேற்றம் காண வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in