

குமரி மாவட்டத்தில் நேற்று பெட்ரோல் விலை ரூ. 100-ஐ தாண்டிய தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.
கடந்த இரு மாதங்களில் லிட்டருக்கு 15 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்தது. குமரி மாவட்டத்தில் நேற்று பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேல் சென்றதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாவட்டத்துக்கு உள்ளேயே ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் சிறு வித்தியாசங்கள் இருந்தன. நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 13 காசு, மார்த்தாண்டம், தக்கலை, திங்கள்நகர், குளச்சல் போன்ற பகுதிகளில் லிட்டர் 100 ரூபாய் 30 காசு மற்றும் அதற்கு மேலும் விற்பனை ஆனது.
குமரி மாவட்டத்தில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை தொட்டுள்ளதால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
நெல்லை
நேற்றுமுன்தினம் லிட்டருக்கு ரூ.99.19 என்றிருந்த விலை, நேற்று 31 காசுகள் உயர்ந்து ரூ.99.50 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுபோல நேற்றுமுன்தினம் டீசல் லிட்டருக்கு ரூ.93.25 என்றிருந்த விலை, நேற்று 34 காசுகள் உயர்ந்து ரூ.93.59 என இருந்தது.