சுதந்திர தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் :

சுதந்திர தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் :

Published on

கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2021-ம் ஆண்டிற்கான சுதந்திர தின விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவை புரிந்த சமூக நலன் சார்ந்த நடவடிக்கையில்

மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறையில் பணிபுரிந்து மகளிர் நலனுக்காக தொண்டாற்றிய சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. “மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்லவளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, செம்மண்டலம், கடலூர்” என்ற முகவரியில் வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in