கிராவல் மண் திருட்டு தேனியில் டிப்பர் லாரி  பறிமுதல் :

கிராவல் மண் திருட்டு தேனியில் டிப்பர் லாரி பறிமுதல் :

Published on

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் கனிம வளத்துறை தனி வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிபவர் பரமசிவம்(32). இவர் தேனி அருகே கோட்டைப்பட்டியில் ரோந்து சென்றார்.

அப்போது மேக்கிழார் பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் சட்டவிரோதமாக கிரா வல் மண் அள்ளிக் கொண்டு டிப்பர் லாரியில் வந்து கொண்டி ருந்தார். அவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவர் தப்பி ஓடினார்.

இதுகுறித்து புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி காவல் சார்பு ஆய்வாளர் சுல்தான் பாட்சா, டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in