

திருவண்ணாமலையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த 5 இளைஞர்களை காவல் துறை யினர் கைது செய்துள்ளனர்.
தி.மலை பெருமாள் நகரில் வசிப்பவர் சகாதேவன்(57). இவர், தி.மலை அவலூர்பேட்டை சாலை – புறவழிச்சாலை சந்திப்பில் கடந்த 21-ம் தேதி பகல் 12 மணியளவில் நடந்து சென்றுள்ளார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் வழிமறித்து, அவரிடம் இருந்த ரூ.500 மற்றும் செல்போனை பறித்துச்சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவண் ணாமலை நகர காவல் துறை யினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்ட தி.மலை வேட்டவலம் சாலையில் வசிக்கும் சிவலிங்கம் மகன் அப்பு(21), தி.மலை தியாகி அண்ணாமலை நகரில் வசிக்கும் வெங்கடேஷ் மகன் பாலாஜி என்கிற கவிபாலாஜி (23) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மற்றொரு சம்பவம்
இதுகுறித்து வெறையூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், மேல்புத்தியந்தல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான விற்பனை கடை அருகே பதுங்கி யிருந்த தி.மலை எல்ஜிஎஸ் நகரில் வசிக்கும் எழில்ராஜன் மகன் அருணாசலம்(21), தி.மலை நகரம் போளூர் சாலை தந்தை பெரியார் நகரில் வசிக்கும் அந்தோணிசாமி மகன் ராபின்ராய்(20), செங்கம் அடுத்த கண்ணக்குருக்கை கிராமம் இந்திரா நகரில் வசிக்கும் குபேந்திரன் மகன் சந்தோஷ் குமார்(22) ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒரு இரு சக்கர வாகனம், இரண்டு கத்தி, செல்போன் மற்றும் ரூ.650 ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.