

கரூர் மாவட்டம் கீழசக்கரக்கோட்டையைச் சேர்ந்த முருகன்ராஜ் (24) என்பவருக்கும், 17 வயது சிறுமிக்கும் பாறைப்பட்டியில் கடந்த 18-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த கடவூர் ஒன்றிய குழந்தை நல அலுவலர் வளர்மதி அளித்த புகாரின் பேரில், முருகன்ராஜ் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் குளித்தலை மகளிர் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.