

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் காணாமல்போன ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை போலீஸார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் செல்போன்கள் திருடப்பட்டது, காணாமல் போனது தொடர்பாக கடந்த ஆண்டு 6 புகார்களும், இவ்வாண்டு 38 புகார்களும் வந்துள்ளன. இந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க மாநகர சைபர் கிரைம் போலீஸாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் தற்போது ரூ.5,04,000 மதிப்பிலான 43 செல்போன்களை போலீஸார் மீட்டுள்ளனர்.
இந்த செல்போன்களை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரியவர்களிடம் காவல்துறை ஆணையர் (பொறுப்பு) பிரவீன்குமார் அபிநபு ஒப்படைத்தார். காவல்துறை துணை ஆணையர்கள் எம். ராஜராஜன், கே. சுரேஷ்குமார், உதவி ஆணையர் ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் கண்ணன், கோமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.