Published : 25 Jun 2021 03:15 AM
Last Updated : 25 Jun 2021 03:15 AM

சிறந்த சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் : வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்

சிறந்த சமூக சேவகர் விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மகளிர் நலன் மற்றும் முன் னேற்றத்துக்காக சேவையாற்றும் நிறுவனம் மற்றும் பெண்களுக்கு சிறந்த சமூக சேவகர் என்ற விருது ஆண்டு தோறும் சுதந்திர தினநாளில் தமிழக முதலமைச் சரால் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தினவிழாவில் வேலூர் மாவட்டத்தில் பெண் களின் நலன் மற்றும் அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் சமூக நிறுவனம் மற்றும் சேவை யளிப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின் றன.

எனவே, விருது பெற விரும்புவோர்கள் தமிழகத்தில் பிறந்திருக்க வேண்டும். பெண்களின் நலனுக்காக மொழி, பன்பாடு, இனம், கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சேவை யளித்தவராக இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும். உரிய விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து அதை சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனம் அல்லது தனி நபர் பெற்ற விருதுகள், பரிசுகள் மற்றும் புகைப்படங்கள் இடம் பெறுதல் அவசியமாகும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் ஜூன் 30-ம் தேதி ஆகும்.

இது குறித்து மேலும் தகவல் பெற விரும்புவோர், ‘‘மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பி-பிளாக், 4-வது மாடி, வேலூர்-9 என்ற முகவரியில் தொடர்பு கொள்ள லாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x