சேலம் மாவட்டத்தில் 22-ம் தேதி வரை - 6.58 லட்சம் பேருக்கு தடுப்பூசி : கோவேக்சின் 16,000 டோஸ் நேற்று வருகை

சேலம் மாவட்டத்தில் 22-ம் தேதி வரை  -  6.58 லட்சம் பேருக்கு தடுப்பூசி  :  கோவேக்சின் 16,000 டோஸ் நேற்று வருகை
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் 22-ம் தேதி வரை 6 லட்சத்து 58 ஆயிரத்து 704 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 2-வது தவணை தடுப்பூசி பயன்பாட்டுக்காக 16 ஆயிரம் டோஸ் கோவேக்சின் வந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கோவிஷீல்டு, கோவேக்சின் கரோனா தடுப்பூசிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் போடப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்துக்கு கடந்த 22-ம் தேதி வரை கோவிஷீல்டு தடுப்பூசி 5 லட்சத்து 52 ஆயிரத்து 430 டோஸ்களும், கோவேக்சின் 1 லட்சத்து 5 ஆயிரத்து 810 டோஸ்கள் என மொத்தம் 6 லட்சத்து 58 ஆயிரத்து 240 டோஸ்கள் வந்திருந்தன.

இதில், 45 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு கோவிஷீல்டு 4 லட்சத்து 14 ஆயிரத்து 45 டோஸ்களும், கோவேக்சின் 83 ஆயிரத்து 250 டோஸ்களும் போடப்பட்டன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு 1 லட்சத்து 22 ஆயிரம் டோஸ்களும், கோவேக்சின் 22 ஆயிரத்து 560 டோஸ்களும் போடப்பட்டன.

இதனிடையே, சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் மிகுந்த ஈடுபாடு காட்டுவதால், தடுப்பூசி இருப்பு வந்ததும், ஓரிரு நாட்களில் அவை தீர்ந்து விடுகின்றன. கடந்த 22-ம் தேதி கோவிஷீல்டு 2 ஆயிரத்து 70 டோஸ்களும், கோவேக்சின் 140 டோஸ்களும் மட்டுமே இருப்பில் இருந்தன.

இந்நிலையில், தொற்றுப் பரவல் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டம் என்பதால், சேலம் மாவட்டத்தில், 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள நேற்று 16 ஆயிரம் டோஸ் கோவேக்சின் வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in