

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத் தில் நடைபெறும் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடை பெற்றது.
இதையொட்டி, காவிரி ஆற்றி லிருந்து ஒரு தங்கக்குடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டு, தங்கக்குடத்தை யானை மீது வைத்தும், 28 வெள் ளிக் குடங்களை தோளில் சுமந்து கொண்டும் ஊழியர்கள் ஊர்வல மாக கோயிலுக்கு எடுத்து வந்தனர்.
பின்னர் மூலவர் ரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்கள் ஆகியோரது திருமேனிகளில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன. பின்னர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
மூலவர் பெருமாள் மீது சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட தைலக்காப்பு பூசப்பட்டது.
இதையடுத்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டன. 48 நாட்களுக்கு பிறகு இந்த தைலம் உலர்ந்த பின் தான் பெரிய பெருமாளின் திரு மேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை பெரிய பெரு மாளின் திருமேனியில் முகத்தை மட்டும் தரிசிக்க முடியும். மூலவர் ரங்கநாதருக்கு பதிலாக நம்பெருமாள் மற்றும் உபயநாச்சி யார்களுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இன்று (ஜூன் 24) காலை திருப் பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும்.