

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின்16-வது சட்டப் பேரவையைத் தொடங்கிவைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் கொள்கை கள், செயல் திட்டங்கள், அவை தொடர்பான சட்டங்கள் குறித்த விளக்கங்கள் குறித்த வரலாற்று ஆவணமாக அமைந்துள்ளது.
வலுவான மாநில அரசுகள் மூலமாகவே வலிமையான ஒன்றிய அரசை உருவாக்க முடியும் என்பதையும், உறவுக் குக் கை கொடுப்போம்- உரிமைக் குக் குரல் கொடுப்போம் என்ப தையும் ஆளுநர் உரை தெளிவு படுத்தியுள்ளது.
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் பொருத்தமானது என தெரிவித்துள்ளார்.