கறம்பக்குடியில் டாஸ்மாக் கடைகளில் குவியும் கூட்டம் :  போக்குவரத்து இடையூறால் மக்கள் அவதி

கறம்பக்குடியில் டாஸ்மாக் கடைகளில் குவியும் கூட்டம் : போக்குவரத்து இடையூறால் மக்கள் அவதி

Published on

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முக்கம், அம்புக்கோவில் முக்கம் ஆகிய பகுதிகளில் சுமார் 300 மீட்டர் சுற்றளவுக்குள் 5 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. அனைத்து பேருந்துகளும் வந்து செல்லக்கூடிய பிரதான பகுதியாக உள்ள இப்பகுதியில் கடைகளும் அதிகளவில் உள்ளன.

இந்நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு வருவோர் ஆங்காங்கே தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதாலும், அருகே உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படாததால், அங்கிருந்து ஏராளமானோர் மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதற்கு வருவதாலும் கூட்டம் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in