சேலம் மாவட்டத்தில் - கட்டுக்குள் வரும் கரோனா தொற்றால் : குறையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் :

சேலம் மாவட்டத்தில்  -  கட்டுக்குள் வரும் கரோனா தொற்றால்  : குறையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்  :
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 68 ஆக குறைந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்த மே 26-ம் தேதி 175 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்தன. இங்கு 6, 268 வீடுகளைச் சேர்ந்த 24,940 பேர் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் இருந்தனர்.

தற்போது, தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 68 ஆக குறைந்துள்ளது. இங்கு 1,128 வீடுகளைச் சேர்ந்த 4,068 பேர் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர். இதில், சேலம் மாநகராட்சியில் 51 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இங்குள்ள 1,117 பேர் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

மாவட்டத்தில் 20-ம் தேதி வரை 11 லட்சத்து 20 ஆயிரத்து 712 பேருக்கு தொற்று கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், 84 ஆயிரத்து 145 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதில், 78 ஆயிரத்து 47 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 1,376 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வரை 4,392 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 900 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in