

மனுவில் உள்ள விவரம்:
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலிச் செலவை எஸ்.சி., எஸ்.டி., இதரர் என கணக்குப் பார்த்து தொகுக்குமாறு மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசின் ஆணை கேட்டுக் கொண்டுள்ளது. ஒரே வேலை, ஒரே ஊதியத்துக்காக தொழிலாளிகளை சாதி ரீதியாகப் பிரிப்பது நியாயம் இல்லை. இவ்வாறு பிரிப்பது பட்டியல் சாதி, பழங்குடி மக்கள் நலனுக்கான முன்னெடுப்பாக இல்லை. இந்த முறையை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்
இதில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அருள்செல்வன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.முத்துச்சாமி, தமிழர் சமூகநீதிக் கழகத் தலைவர் தங்கபாண்டி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.