

சேலம் மாவட்டத்தில் நேற்று 127 மையங்களில் 22,230 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
கரோனா தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் முழுவதும் 127 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளி, கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சேலம் மாநகராட்சியில் இரு வார்டுகளுக்கு ஒரு மையம் என 30 மையங்களிலும், புறநகர் பகுதிகளில் 97 மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இம்மையங்களில் நேற்று காலை 6 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்றும், பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் வகுப்பறைகளில் சமூக இடவெளி பின்பற்றி அமர்ந்தும் பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். நேற்று ஒரேநாளில் 22,230 பேர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். இவர்களில் 1,270 பேர் மாற்றுத்திறனாளிகள்.
இன்று 132 மையங்கள்