பெட்ரோல்- டீசல் விலை உயர்வைக் கண்டித்து அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் அலாவுதீன் தலைமை வகித்தார். செயலாளர் ஜாபர் ஷெரீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.