

திருச்சி பொன்மலையிலுள்ள ரயில்வே பணிமனையில் சர்வதேச யோகா தினவிழா நேற்று நடைபெற்றது. முதன்மை பணிமனை மேலாளர் ஷியாமதர்ராம் தலைமை வகித்தார். யோகா பயிற்றுநர் செல்வம் வழிகாட்டலின்படி பணிமனை அதிகாரிகள், பணியாளர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதில் பணியாளர் நல அலுவலர் சங்கரன், துணை தலைமை இயந்திரவியல் பொறியாளர் கிளமென்ட் பர்னபாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொல்லியல் துறை சார்பில் மலைக்கோட்டை குகை வாசல் பகுதியில் நடைபெற்ற யோகா தின விழாவுக்கு திருச்சி மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமை வகித்தார். இதில் தொல்லியல் துறை பணியாளர்கள், மாணவ, மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.