

திருச்சியில் 251, தஞ்சாவூரில் 388, திருவாரூரில் 103, நாகை, மயிலாடுதுறையில் 120, கரூரில் 101, புதுக்கோட்டையில் 86, பெரம்பலூரில் 37, அரியலூ ரில் 83 பேருக்கு நேற்று புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 884, கரூரில் 116, திருவாரூரில் 238, தஞ்சாவூரில் 570, நாகை, மயிலாடுதுறையில் 324, புதுக்கோட்டையில் 174, பெரம்பலூரில் 84, அரியலூரில் 55 என 2,445 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் கரூர், பெரம்பலூரில் தலா 1, திருச்சியில் 12, நாகையில் 4, அரியலூரில் 3, புதுக்கோட்டையில் 6, தஞ்சாவூரில் 8, திருவாரூரில் 2 என 37 பேர் உயிரிழந்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது.