சேலம், ஈரோடு வழியாகஎர்ணாகுளம்-பிலாஸ்பூர் சிறப்பு ரயில் இயக்கம் :

சேலம், ஈரோடு வழியாகஎர்ணாகுளம்-பிலாஸ்பூர்  சிறப்பு ரயில் இயக்கம் :
Updated on
1 min read

சேலம், ஈரோடு வழியாக எர்ணாகுளம்- பிலாஸ்பூர் இடையே இரு மார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சேலம் மற்றும் ஈரோடு வழியாக இயக்கப்படும் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர்- எர்ணாகுளம் (எண்.08227) ரயில் வரும் 28-ம் தேதி பிலாஸ்பூரில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு சேலத்துக்கு 29-ம் தேதி நண்பகல் 12.47 மணிக்கும், ஈரோட்டுக்கு மதியம் 1.55 மணிக்கும், திருப்பூருக்கு மதியம் 2.43 மணிக்கும், கோவைக்கு மதியம் 3.42 மணிக்கு வந்தடைந்து. அன்று இரவு 8.15 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம் ஜங்ஷனை சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில் வரும் 30-ம் தேதி எர்ணாகுளம்- பிலாஸ்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (எண்.08228) எர்ணா குளம் ஜங்ஷனில் இருந்து காலை 8.50 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு மதியம்1.17 மணிக்கும், திருப்பூருக்கு மதியம் 2.08மணிக்கும், ஈரோட்டுக்கு மாலை 3 மணிக்கும், சேலத்துக்கு மாலை 4.07 மணிக்குவந்தடைகிறது பின்னர் ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக பிலாஸ்பூரை ஜூலை1-ம் தேதி இரவு 9.35 மணிக்கு சென்றடைகிறது என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in