

மத்திய மண்டலத்தில் புதிதாக 1,198 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
அரியலூரில் 81 பேர், பெரம் பலூரில் 52 பேர், கரூரில் 103 பேர், நாகை, மயிலாடுதுறையில் 135 பேர், புதுகையில் 84 பேர், தஞ்சையில் 370 பேர், திருவாரூரில் 110 பேர், திருச்சியில் 263 பேர் என 1,198 பேருக்கு நேற்று கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரியலூர் 76 பேர், கரூரில் 161 பேர், நாகை, மயிலாடுதுறையில் 390 பேர், புதுகையில் 187 பேர், பெரம்பலூரில் 96 பேர், தஞ்சையில் 634 பேர், திருவாரூரில் 266 பேர், திருச்சியில் 916 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.
அரியலூரில் 4 பேர், நாகையில் 2 பேர், புதுகையில் 2 பேர், பெரம்பலூரில் ஒருவர், தஞ்சையில் 8 பேர், திருவாரூரில் ஒருவர், திருச்சியில் 13 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று 31 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதும் இல்லை.