

திருச்சி மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் உச்சத்தில் உள்ளது. மார்க்கெட்டுகளுக்கு வரும் பல்வேறு ரக மாம்பழங்கள் பழ விற்பனைக் கடைகள், தள்ளு வண்டிகள், சாலையோர கடைகள் மூலம் விற்பனை செய்யப்படு கின்றன.
இந்நிலையில், ஜூன் மாதத்தில் இதுவரை ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்டிருந்த 4,400 கிலோ மாம்பழங்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்திருப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வ லர்கள் கூறியது: திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு தற்போது தினமும் 100 டன் மாங்காய்கள் வருகின்றன. மாங்காய்களை மொத்தமாக வாங்கி குடோன்களில் பாதுகாத்து வைக்கும் வியாபாரிகள் சிலர், ஒவ்வொரு நாளும் வியாபாரத் துக்குத் தேவைப்படும் அளவை தோராயமாக கணக்கிட்டு, அந்த அளவு மாங்காய்களை மட்டும் பெட்டிகளில் அடுக்கி, ஒருநாள் முன்னதாக ரசாயனம் தெளித்து, காகிதங்களால் மூடி விடுகின்றனர். ரசாயனம் தெளித் ததன் மூலம் மறுநாள் பழுத்து விடும் மாம்பழங்கள், இயற்கை யாக பழுத்த மாம்பழங்களுடன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்து மக்களையும் சென்றடை கின்றன.
இவ்வாறு ரசாயனம் வைத்து பழுக்கவைக்கப்படும் மாம்பழங் களைச் சாப்பிடுவதால் பொதுமக் களுக்கு பல்வேறு உடல்நலக் குறைவு ஏற்படும். எனவே, ரசாயனம் தெளித்து மாங்காய்களைப் பழுக்க வைக்காமல், இயற்கை முறை யில் பழுக்கவைத்து அவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்றனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ் பாபு கூறியது:
திருச்சி மாவட்டத்தில் ரசாயனம் தெளித்து செயற்கை முறையில் பழுக்க வைத்ததாக இதுவரை 4,400 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப் பட்டுள்ளன. இதுதொடர்பாக உண வுப் பாதுகாப்புத் துறை தர நிர்ணயச் சட்டம் 2006-ன்படி 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மாம்பழம் ரசாயனம் வைத்து பழுக்கவைக்கப்பட்டதா என்பதை பொதுமக்களால் எளிதில் கண்டறிய முடியாது. ஆய்வக சோதனையின் மூலமே உறுதி செய்ய முடியும்.
எனவேதான், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் திடீர் ஆய்வு செய்வதுடன், மக்க ளிடம் இருந்து புகார்கள் வரும் போதும் விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதாகவோ அல்லது பழங்கள் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்படுவதாகவோ அறிந்தால் 9585959595, 9944959595 ஆகிய செல்போன் எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரி வித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.