Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM

கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1000-ஆக குறைந்தது : தீவிர கண்காணிப்பை தொடர மதுரை மாவட்ட நிர்வாகம் முடிவு

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருப் பவர்களின் எண்ணிக்கை ஆயிரத் துக்குக் கீழ் குறைந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் 15 முதல் ஜூன் 17 வரை கரோனாவால் 49,477 பேர் பாதிக்கப் பட்டனர்.

நேற்று பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியது. நேற்று வரை குண மடைந்தோர் எண்ணிக்கை 49 ஆயிரத்தை நெருங்கியது. 615 பேர் இறந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் குறைவானோரே சிகிச்சையில் உள்ளனர்.

வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோர் 50 பேர். தினசரி தொற்று கடந்த மே 26 ஒரே நாளில் 1538 பேராக இருந்த நிலையில், படிப்படியாக குறைந்து நேற்று 145 ஆனது. அடுத்த ஓரிரு நாட்களில் கரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்துக்கு வரும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனையில் 2,500 படுக்கைகள், தனியார் மருத்துவ மனையில் 2 ஆயிரம், தற்காலிக சிகிச்சை மையங்களில் 2,500 படுக் கைகள் காலியாக உள்ளன. ஒருசில தனியார் மருத்துவ மனைகளில் மட்டும் இரட்டை இலக்க எண்ணிக்கையில் சிகிச்சையில் உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: கரோனா தொற்று மதுரையில் கடந்த மாத இறுதியில் குறையத் தொடங்கியது. எனினும் கிராமங்களில் பரிசோதனை மேற்கொண்டோரில் 15% பேருக்கு தொற்று இருந்தது. இதனால் மீண்டும் மாவட்டம் முழுவதும் பரவும் அபாயம் இருந்தது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் உள் ளிட்டோரின் முயற்சியால் மகளிர் குழுவினர், தன்னார்வலர்கள் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் களம் இறக்கப்பட்டனர்.

வீடு, வீடாக காய்ச்சல் பரி சோதனை, பாதிப்பு இருப்போருக்கு உள்ளூரிலேயே சிகிச்சை என ஏற் பாடுகள் செய்யப்பட்டன. இதனால் நோய் பரவல் கட்டுக்குள் வந்தது. 3-வது அலை வரலாம் என்ற எச்சரிக்கை உள்ளது. இதனால் மாவட்டத்தில் தீவிரக் கண்காணிப்பு தொடரும். 20 ஆயிரத்துக்கும் அதி கமானோர் பாதிக்கப்பட்டாலும் சிகிச்சை அளிக்கும் வசதி உரு வாக்கப்பட்டுள்ளது. நோய் பர வும் முன்னரே கட்டுப்படுத்தும் பணி நன்கு உதவியது. வரும் காலங்களில் ஆரம்ப நிலையிலேயே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு கரோனாவை தைரியமாக எதிர் கொள்ள முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x