Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 23 கிமீ தூரத்தில் அடுக்கம் மலைக்கிராமம் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான கொடைக்கானலையும், தேனி மாவட்டத்தின் சுற்றுலாத்தலமான கும்பக்கரை அருவியையும் இணைக்கும் வகையில் இந்த மலைச்சாலை உள்ளது.
தேனி மாவட்டத்தில் இருந்து கொடைக்கானலுக்கு மாற்றுப் பாதையாகவும் இந்தச் சாலை அமைந்துள்ளது. இருப்பினும் இச்சாலையின் அகலம் குறைவாக இருப்பதுடன், தொடர் மழையால் மண் சரிவுகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.
இந்தச் சாலையில் தற்போது சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இச்சாலையின் பல பகுதிகளில் தடுப்புச் சுவர் மற்றும் சிறு பாலங்கள் கட்டும் பணி நடக்கிறது.
எனவே இப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவசர மற்றும் விவசாயப் பணிகளுக்காக கிராமங்களில் இருந்து இருசக்கர வாகனங்களில் செல்வோர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT