Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM

இந்தியாவை அடுத்த 6 முதல் 8 வாரங்களில் - கரோனா 3-ம் அலை தாக்கக் கூடும் : எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை

புதுடெல்லி

கரோனா வைரஸின் மூன்றாவது அலை இந்தியாவை 6 முதல் 8 வாரங்களில் தாக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். மேலும், ஏற்கெனவே நாம் எதிர்கொண்ட இரண்டு அலைகளை விட மூன்றாம் அலை மிக தீவிர மானதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது.இதன் காரணமாக, நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப் பாடுகளில் பெரிய அளவில் தளர்வுகள் வழங்கப்படுவதை பார்க்க முடிகிறது. தளர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க, மக்கள் மத்தியில் வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பல மடங்கு குறைகிறது. முகக்கவசம் அணி தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மக் கள் கைவிட்டு வருகின்றனர். இதனை உற்று நோக்கும்போது, பெருந்தொற்றின் முதல் அலை, இரண்டாம் அலையில் இருந்து நாம் பாடம் ஏதும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

ஆகவே, இந்தியாவை அடுத்த 6 முதல் 8 வாரங்களில் வைரஸின் மூன்றாம் அலை தாக்கக்கூடும். மூன்றாம் அலையை நாம் சிறிது வேண்டுமானால் தாமதப்படுத்த லாம். ஆனால், அதனை தவிர்க்க முடியாது. எனவே, மூன்றாம் அலையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

வைரஸ் உருமாற்றம் அடைவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஏனெனில், பிரிட்டனில் இருந்து வந்த புதிய வகை உருமாற்ற வைரஸால் தான், இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்தது.

அதேபோல, வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கும்போது, எந்தெந்த பகுதிகளில் தினசரி பாதிப்பு அதிகமாக பதிவாகிறதோ அங்கெல்லாம் சிறிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவதவர்களே, வைரஸ் தாக்குதலுக்கு எளிதில் ஆளாவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கரோனா முதல் அலையில், வைரஸ் பரவலின் வேகம் குறைவாக இருந்தது. ஆனால், இரண்டாம் அலையில் வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்ததுடன் அதன் வீரியமும் அதிகமாக இருந்தது. எனவே, மூன்றாம் அலையின்போது வைரஸ் பரவலும் அதன் வீரியமும் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

வைரஸ் பரவுவது அதிகரிக்கும் போது மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும். இதுபோன்ற அனைத்து பிரச்சினைகளையும் முன்கூட்டியே கணித்து, மூன்றாம் அலையை சமாளிக்க நாம் வியூகம் அமைப்பது அவசியம். இவ்வாறு ரன்தீப் குலேரியா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x