

தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கி தொடர்ந்து 10 நாட்களுக்கு மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்றும், இதற்காக நாளொன்றுக்கு 2 முதல் 3 மணிநேரம் மின்தடை அமலில் இருக்கும் என்றும், பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்பெட்டிகள் போர்க்கால அடிப்படையில் மாற்றப்படும், மின்மாற்றிகள் பராமரிப்பு செய்யப்படும் என்றும் மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.
அதன்படி, திருநெல்வேலியில் விஎம் சத்திரம், சமாதானபுரம், வண்ணார்பேட்டை, சாந்திநகர், மகாராஜ நகர், பெருமாள்புரம், ரெட்டியார்பட்டி பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 125 மின்வாரிய அலு வலர்கள் மற்றும் பணியாளர்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.