

திருநெல்வேலி அருகே முன்னீர் பள்ளம் பகுதியில் கடந்த 25.02.2019-ல் கீழ முன்னீர்பள்ளம் மருதம் நகரைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது-.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி பாலமுருகேஷ் என்பவர் பாளையங்கால்வாயில் குளித்து விட்டு, அவரது நண்பருடன் மருதுநகர் பிள்ளையார் கோவில் அருகில் பேசிக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அவரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியது. இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி அருண்பாண்டி, இசக்கி பாண்டி ஆகியோரை 17-ம் தேதி கைது செய்திருந்த நிலையில், கீழமுன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த சங்கர் என்ற சங்கரலிங்கம் (22), அருணாச்சலம் (21), சுப்பிரமணி, தருவை பகுதியைச் சேர்ந்த முத்து (20), தென்திருபுவனம் பகுதியைச் சேர்ந்த பேச்சிதுரை(22) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர் பாக இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது.