

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள ஜம்புநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராம்கி(22). இவர் கடந்த 15-ம் தேதி, பிளஸ் 2 மாணவி ஒருவரை கடத்திச் சென்று, தலையில் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், பெற்றோர் இல்லாமல் வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 1 மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அவருக்கு கிருபாகரன் (19) என்பவர் உதவி செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் ராம்கி, கிருபாகரன் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் முசிறி அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.