Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

இருதரப்பினர் மோதலில் வாகனங்கள் எரிப்பு - 20 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு :

பரமக்குடி அருகே இருதரப்பினர் மோதலில் கார், டிராக்டர்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக் குடி வட்டம் நயினார்கோவில் அருகேயுள்ள பாண்டியூர் கிராம த்தைச் சேர்ந்தவர் சாமிதுரை. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் தரப்புக்கும் இடையே ஊராட்சி தேர்தலில் இருந்து முன்விரோதம் இருந் துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு நேரத்தில் முத்துராமலிங்கம் தரப்பைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கள்ளத்தனமாக பதுக்கி வைத் திருந்த மதுபாட்டில்களை போலீ ஸார் பறிமுதல் செய்தனர். மது விற்பனை குறித்து சாமிதுரை தரப்பி னர்தான் போலீஸூக்கு தகவல் தெரிவித்தனர் என சதீஷ்குமார் தரப்பினர் சந்தேகப்பட்டனர்.

இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த சதீஷ்குமார் மற்றும் அவரது தரப்பினர், சாமிதுரை தரப்பைச் சேர்ந்த அன்பழகன் உள்பட 6 பேரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மண்வெட்டி மற்றும் இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கி காயப்படுத்தினர். இதுகுறித்து இருதரப்பையும் சேர்ந்த 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து நேற்று முன் தினம் இரவு முத்துராமலிங்கம் தரப்பைச் சேர்ந்தவர்கள், சாமிது ரையின் செங்கல் சூளைக்குச் சென்று, சாமிதுரையின் சகோதரர் ராஜாவை வெட்டினர்.

இதனால் கோபமடைந்த சாமிதுரை தரப்பினர் முத்துரா மலிங்கம் தரப்பினரின் 2 கார், 2 டிராக்டர், 4 இருசக்கர வாக னங்களை எரித்தனர்.

பின்னர் முனியாண்டி, தமிழ ரசன், முத்துராமலிங்கம் உட்பட 8 பேரின் வீடுகளை சேதப்படுத்தினர். தீயணைப்பு வாகனம் மூலம் தீ அணைக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் இ.கார்த்திக், பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 9 பேரை நயினார்கோவில் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x