துப்பாக்கித் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் - கரோனா தடுப்புப் பணிகளில் தீவிரம் காட்டும் ‘கர்னல்’ குழு :

துப்பாக்கித் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் -  கரோனா தடுப்புப் பணிகளில் தீவிரம் காட்டும் ‘கர்னல்’ குழு :
Updated on
1 min read

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர், கரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவுவதற்காக துப்பாக்கித் தொழிற்சாலையின் பாதுகாப்பு படையினரைக் கொண்டு ஒரு குழு உருவாக்கப்பட்டது. இக்குழு தற்போது அங்கு மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களிலும் கரோனா தடுப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இதுகுறித்து இக்குழுவை உருவாக்கி, ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் துப்பாக்கித் தொழிற்சாலையின் பாதுகாப்பு அதிகாரியான லெப்டினன்ட் கர் னல் கே.கார்த்திகேஷ் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

கரோனா 2-வது அலை வேகமாக பரவிய கடந்த மாதத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை யில் பணிபுரியும் தொழிலாளர் கள், அவர்களது குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனை களில் படுக்கை கிடைக்காததால், தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் பிரத்யேகமாக ஒரு குழுவை உருவாக்கி, மாவட்ட நிர்வாகம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் அவர்களை மருத்துவ மனைகளில் சேர்க்க உதவினோம்.

இதன்படி கடந்த ஒரு மாதத்தில் 70 பேரை திருச்சியிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சேர்த்தோம். எனினும் அவர்களில் 3 பணியாளர்கள் உட் பட 6 பேர் இறந்துவிட்டனர். 64 பேரை காப்பாற்றி விட்டோம். இப்போது கரோனா பரவும் விகிதம் குறைந்துவிட்ட நிலையில், இக்குழுவினரைக் கொண்டு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதன்பலனாக பணியாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 4,500 பேரில் இதுவரை 2,000 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இன்னும் ஒரு மாதத்துக் குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம்.

மேலும், இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் யாருக்கேனும் தடுப்பூசி தேவைப்பட்டால் குழு வின் கட்டுப்பாட்டு அறையை 9489534478 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in