

திருநெல்வேலி அருகே முன்விரோதம் காரணமாக ஐடிஐ மாணவர் உள்ளிட்ட 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். வீடு, வாகனங்கள் சூறையாடப்பட்டன.
திருநெல்வேலி அருகேயுள்ள கீழமுன்னீர்பள்ளம் முல்லைநகரை சேர்ந்த மாடசாமி மகன் பாலமுகேஷ் (19). பேட்டையிலுள்ள ஐடிஐ-யில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் நேற்றுமுன்தினம் மாலையில் அங்குள்ள கால்வாயில் குளிக்க சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் அரிவாள், உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து பாலமுகேஷை வழிமறித்து தாக்கினர். அதை தடுத்த அவரது நண்பர்களும் தாக்கப்பட்டனர். பலத்த காயமடைந்த பாலமுகேஷ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தை அறிந்த பாலமுகேஷின் உறவினர்களும், நண்பர்களும் கீழமுன்னீர்பள்ளம் பகுதிக்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்ட வீடுகளைத் தாக்கினர். வைக்கோல் படப்புக்கு தீ வைக்கப்பட்டது. 5 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. தீயணைப்பு படையினர் அங்குவந்து தீயை அணைத்தனர்.
பாலமுகேஷை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறு த்தி, முல்லைநகர் பகுதியில் மறியல் நடந்தது. அதுபோல், தங்கள் வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித் தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கீழமுன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்பாசமுத்திரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின்குமார் அபிநபு, மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உள்ளிட்ட போலீஸார் அங்குவந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பிலும் முக்கிய பிரமுகர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
இந்நேரத்தில், கோபாலசமுத் திரம் அகதிகள் முகாமுக்குள் அரிவாள்களுடன் புகுந்த 6 பேர் கும்பல் அங்கிருந்த சின்னத்துரை (55), பெருமாள் (65) ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டது. பலத்த காயமடைந்த இருவரும் திருநெல் வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச் சம்பவத்தை கண்டித்து அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அகதிகள் முகாமில் இருதரப்பினரிடையே இருக்கும் முன்விரோதத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததா அல்லது பாலமுகேஷ் விவகாரம் தொடர்பாக நடந்ததா? என்பது குறித்து, விசாரணை நடைபெறுகிறது.
முன்விரோதம்
ஐ.ஜி. விசாரணை