

தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் வலியுறுத்தினார்.
திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப் படுத்த மாநில அரசுக்கு, மத்திய அரசின் ஒத்துழைப்பு போதுமான தாக இல்லை. அதிக மக்கள் தொகையைக் கொண்ட தமிழகத் துக்கு தடுப்பூசி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களை, மாநில அரசுகள் செயல்படுத்துவதற்கான நிதியை முழுமையாக வழங்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை குறைந் துள்ள சூழலில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. அதேபோல கரோனா தொற்று பாதிப்புள்ள இந்த காலகட்டத்தில் மருந்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மத்திய அரசு சார்பில் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியு றுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களை பாது காக்கப்பட்ட வேளாண் மண்ட லமாக அறிவித்த நிலையில் ஹைட்ரோகார்பன் எடுக்க கோருவது ஏற்புடையதல்ல. மத்திய அரசு தனது பிடிவாத நிலையை கைவிட வேண்டும். இல்லா விட்டால் பொதுமக்கள் தன்னெ ழுச்சியாக போராட்டத்தில் ஈடுபடுவர் என்றார்.