Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM
கோவை போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 18 வயதுக்கு குறைவான சிறுமிகள் சிலருக்கு திருமணம் நடந்ததாக, கோவை மாவட்ட குழந்தைகள் நலப் பிரிவு (சைல்டு லைன்) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, சைல்டு லைன் அதிகாரிகள், வெள்ளலூர் கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன் ஆகியோர் வெள்ளலூர் வள்ளலார் காலனியில் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். அதில் வடிவேல் என்பவரது மகன் விக்னேஷ்வரன்(20), கடந்த பிப்ரவரி மாதம் பழநியில் வைத்து சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் விக்னேஷ்வரன் மீது போத்தனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல, கோணவாய்க்கால் பாளையத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (19), கடந்தாண்டு டிசம்பர் மாதம் கோயிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்ததும், குறிச்சி அருகேயுள்ள மேட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரநாதன், கடந்த ஏப்ரல் மாதம் பழநியில் வைத்து சிறுமியை திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் பாலதுரைசாமி அளித்த புகாரின் பேரில், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று சிறுமிகளும் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT