கோவை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் - ஆணையரின் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக புகார் அனுப்பலாம் : வாட்ஸ்அப் எண், சமூக வலைதள முகவரிகளும் வெளியீடு

கோவை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் -  ஆணையரின் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக புகார் அனுப்பலாம் :  வாட்ஸ்அப் எண், சமூக வலைதள முகவரிகளும் வெளியீடு
Updated on
1 min read

கோவை மாநகர மக்கள் தங்களதுபுகார்களை மின்னஞ்சல் மூலமாக நேரடியாக அனுப்பலாம் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது புகார்களை தொலைபேசி, அலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

அதன்படி, கரோனா தொடர்பாக மாநகராட்சி பிரதான அலுவலக கட்டுப்பாட்டு அறையை 0422 – 2302323 என்ற எண்ணிலும், கரோனா கட்டுப்பாட்டு அறையை9750554321, 18004255019 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் ஆலோசனை பெற 0422 – 4585800, காய்கறி வாகனங்கள் தொடர்பாக புகார் அளிக்க 7305028710, 0422 – 2391073,கரோனா வாட்ஸ்அப் உதவிக்கு 9750554321 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பொதுவான புகார்களை 8190000200 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும்,grievance@ccmc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், ஆணையருக்கு நேரடியாக cmmr.coimbatore@tn.gov.in என்ற முகவரியிலும் அனுப்பலாம்.

மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தைhttps://www.facebook/CoimbatoreCorporation என்ற முகவரியிலும், ட்விட்டர் பக்கத்தை CoimbatoreCorporation@cbecorp என்ற முகவரியிலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தை ccmc.gov.in என்ற முகவரியிலும் சென்று காணலாம்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

மார்க்கெட்டில் ஆய்வு

மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மொத்த காய்கறி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், காய்கறி வியாபாரிகளிடம் பேசும்போது, “அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மெக்ரிக்கர் சாலையில் தூய்மைப் பணியாளர்களால் குப்பை தரம் பிரித்து சேகரிக்கப்படும் பணி, ஆர்.எஸ்.புரத்தில் களப்பணியாளர்களின் கரோனா தொற்று தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in