

சென்னை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள வீட்டில் 10-க்கும் மேற்பட்டோர் மது அருந்திய நிலையில், பணம் வைத்து நேற்று முன்தினம் இரவு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரான ராம்குமார் (எ) ராம்கியை(33) மற்றொரு தரப்பான ஆட்டோ ஓட்டுநர் சிவா(30) அவரது நண்பர்கள் பாலாஜி(28), சுரேஷ்(32) உள்ளிட்ட 10 பேர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராம்குமார் உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீஸார், தீவிரமாக விசாரிக்கின்றனர்.