

இதனை கம்பம், ஆண்டிபட்டி எம்எல்ஏக்கள் என்.ராமகிருஷ்ணன், மகாராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், கண்காணிப்பாளர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த வார்டுகளில் குழந்தைகளுக்கு 30 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
டீன் பாலாஜிநாதன் கூறுகையில், தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளவும், காணொலி அழைப்புகள் மூலம் பயன் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.