

நாமக்கல்: மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும், என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் பாசன விவசாயிகள் கூறியதாவது:
மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பருவமழையும் வரத் தொடங்கியுள்ளது. இதை மையப்படுத்தி மேட்டூர் கிழக்குக்கரை விவசாயிகளும் நடவுப் பணிகளை தொடங்கியுள்ளனர். இதனால், மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும். முன்னதாக தண்ணீர் கடைமடை வரை பாய்ந்து செல்ல வாய்க்கால் வழித்தடம் முழுவதும் தூர் வாரப்படவேண்டும், என்றனர்.