

சாயர்புரம் போப் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் நேசம் மாணவர் மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு தொடர்பான வினாடி- வினா மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு சாயர்புரம் போப் கல்லூரி முதல்வர் இம்மானுவேல் தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர்கள், திருநங்கைகள் 25 பேருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் தினகரன் செய்திருந்தார்.