

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 1,311 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் 413 பேருக்கும், தஞ்சாவூரில் 615 பேருக்கும், திருவாரூரில் 239 பேருக்கும், நாகையில் 323 பேருக்கும், கரூரில் 95 பேருக்கும், புதுக்கோட்டையில் 123 பேருக்கும், பெரம்பலூரில் 66 பேருக்கும், அரியலூரில் 91 பேருக்கும் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சி யில் 875, கரூரில் 402, திருவா ரூரில் 426, தஞ்சாவூரில் 1,311, நாகையில் 598, புதுக் கோட்டையில் 260, பெரம்பலூ ரில் 210, அரியலூரில் 164 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கரூரில் 2, திருச்சியில் 11, நாகப்பட்டினத்தில் 8, புதுக்கோட்டையில் 7, தஞ்சாவூரில் 4, திருவாரூரில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.