Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM

கரோனா தடுப்பூசிகளுக்கு 5 சதவீத வரி தொடரும் - கருப்பு பூஞ்சை மருந்துக்குமுழுமையாக வரி விலக்கு : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி

கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மருந்துகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து (ஜிஎஸ்டி) முழுவதுமாக விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. அதேநேரம் கரோனா தடுப்பூசிகளுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வரிவிதிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வீடியோ காணொலி மூலம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் கூறியுள்ளதாவது:

கருப்பு பூஞ்சை நோய் சிகிச் சைக்கு அளிக்கப்படும் டோஸில் ஜும்ப் மற்றும் அம்போடெரிசின் பி ஆகிய மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிப்பதென கவுன்சில் கூட்டத் தில் முடிவு எடுக்கப்பட்டது. அதே நேரம் இந்த தடுப்பு மருந்துகள் மீதான வரிவிலக்கு சலுகை செப் டம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். தேவைப்படும் பட்சத் தில் இந்தச் சலுகை நீட்டிக்கப்படும். மேலும் கரோனா மருந்துகள், ஆக்சிஜன், ஆக்சிஜன் உற்பத்தி சாதனங்கள், பரிசோதனை கருவி கள் மற்றும் கரோனா சார்ந்த பிற உபகரணங்கள் மற்றும் கரோனா நிவாரண பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு அளிப்பது குறித்து கவுன்சில் கூட்டத்தில் விவா திக்கப்பட்டது.

முந்தைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிபிஇ கிட்ஸ், முகக் கவசம், கரோனா தடுப்பூசி உள் ளிட்டவற்றுக்கு வரிவிலக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

கரோனா தடுப்பூசிகளுக்கு...

இது குறித்து ஆராய மேகாலய நிதி அமைச்சர் கோன்ராட் சங்மா தலைமையில் அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ஜூன் 7-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தனர். இதில் கரோனா சார்ந்த மருந்து பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் கரோனா வைரஸ் பரவல் தடுப்பூசிகளான கோவேக் சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய வற்றுக்கு தொடர்ந்து 5 சதவீத ஜிஎஸ்டி வரி நீடிக்கும். ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கருவிகள், ஆர்என்ஏ பரிசோதனைக் கருவி கள், ஜெனோம் பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்டவை மீதான 18 சதவீத வரிவிதிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. நோய் கண் டறியும் சாதனங்களான டி-டிமர், ஐஎல்-6, பெரிடின், எல்டிஹெச் ஆகியவற்றுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும்.

கரோனாவுக்கு சிகிச்சை அளிக் கப்படும் பிற மருந்துகளான ஹெபா ரின், ரெம்டெசிவர் ஆகியவற்றின் மீதான வரியும் மருத்துவமனை களில் பயன்படுத்தப்படும் ஆக் சிஜன் செறிவூட்டிகள் மீதான வரியும் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

தடுப்பூசி மருந்துகளில் 75 சத வீதம் மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு வாங்கினாலும் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வரி செலுத்தப்படும். இவ்விதம் செலுத் தப்படும் வரி மாநிலங்களுக்கு பிரித்து அளிக்கப்படும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x