பெருந்துறை கொங்கு கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு தொடக்கம் :

பெருந்துறை கொங்கு கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு தொடக்கம் :
Updated on
1 min read

பெருந்துறை கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்ட கரோனா சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவில் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய் தொற்றால் பாதிக் கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகளில் கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெருந்துறை யில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசின் சித்த மருத்துவப் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in