மூத்த குடிமக்கள் உதவிக்கு தொலைபேசி எண் :

மூத்த குடிமக்கள் உதவிக்கு தொலைபேசி எண் :
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளயிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய அளவில் மூத்த குடிமக் களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், ஓய்வூதியம், மருத் துவச் சேவை மற்றும் முதி யோர் இல்லங்கள் குறித்த விவரங்களை எளிதில் பெற 14567 என்ற கட்டணமில்லா உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆதரவும் பராமரிப்புமின்றி சிரமப்படும் மூத்த குடிமக்கள் உதவி பெறவும், மூத்த குடிமக்களின் பிரச்சினைகளுக்கான சட்ட ஆலோசனை பெறவும், ஆற்றுப்படுத்துதல் போன்ற உதவிகளைப் பெறவும் 14567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in