ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர்.
ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர்.

தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.634 நிர்ணயம் செய்ய கோரிக்கை :

Published on

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் அதன் தலைவர் ஆர். மோகன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:

திருநெல்வேலி மாவட்டத்தில் பணி செய்யக்கூடிய ஒப்பந்த மற்றும் சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்களுக்கு தற்போது தினக்கூலியாக ரூ.388 வழங்கப்படுகிறது. கூலியானது கடந்த 2019-2020 ஆண்டில் ரூ.359 ஆக இருந்தது. கடந்த ஆண்டு 26.8.2020-ம் தேதி மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி ரூ.29 உயர்த்தப்பட்டு, தற்போது தினக்கூலியாக ரூ.388 பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். 2017-ம் ஆண்டு தூய்மை பணி தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.634 நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு, திருநெல்வேலி மாவட்டத்தில் அமல்படுத்தப்படவில்லை. 2017-2018-ல் அப்போதைய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தினக்கூலியில் ரூ.100 உயர்வு வழங்கியிருந்தார். அதன்பின் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ.27, ரூ.29 மட்டுமே உயர்வு ஏற்பட்டுள்ளது.

கடுமையான விலைவாசி உயர்வு காரணமாக தூய்மைப் பணியாளர் கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, 2021-2022-ம் ஆண்டுக்கு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவுப்படி தினக்கூலியாக ரூ.634 நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in