காட்டுமன்னார்கோவில் வட்டப் பகுதியில் - வடிகால் வாய்க்கால்கள் சீரமைப்பு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குமராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவாயம் பகுதியில்  வடக்கு ராஜன் வாய்க்காலை தூர் வாரி கரையை பலப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குமராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவாயம் பகுதியில் வடக்கு ராஜன் வாய்க்காலை தூர் வாரி கரையை பலப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் பொதுப்பணித்துறையின் மூலம் நடைபெறும் பல்வேறு பணி ஆய்வு செய்யப்பட்டது.

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றஉறுப்பினர் சிந்தனை செல்வன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பணிகளை பார்வையிட்டார்.

இதில்,குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரநத்தம்ஊராட்சியில் வெள்ளியங்கால் கிளை வாய்க்காலில் தூர்வாரிகரைகள் பலப்படுத்தும் பணிநடைபெறுவதையும், வானதிராயன்பேட்டை வடிகால்வாய்க்காலில் ரூ.4.10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்றுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து காட்டு மன்னார்கோவில் அருகே குணவாசல் ஊராட்சியில் முட்டம் கிளை வாய்க்காலினை ரூ.8.85 லட்சம் மதிப்பீட்டிலும், முட்டம் புஞ்சை வாய்க்காலினை ரூ11.30 லட்சம் மதிப்பீட்டிலும் தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராதாம்பூரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார். கண்டமங்கலம் வடிகால் வாய்க்கால் ரூ.4.40 லட்சம் மதிப்பீட்டிலும்,வெங்கடேசபுரம் வடிகால் வாய்க்கால் ரூ.7.90 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரி கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும், குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவாயம் பகுதியில் வடக்கு ராஜன் வாய்க்காலினை தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்றுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து வடிகால் மற்றும் கரைகள் பலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவிசெயற்பொறியாளர்கள் அருணகி,பாலமுருகன், காட்டுமன்னார் கோவில் வட்டாட்சியர் ராமதாஸ், உதவி பொறியாளர்கள்ஞானசேகர், முத்துக்குமார், வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in