Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

கடன் தொகையை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது : மதுரை ஆட்சியர் அறிவுறுத்தல்

மதுரை

மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அவசர தேவைக்காக நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கடன் பெற் றுள்ளனர். ஊரடங்கு காரண மாக பலருக்கு சரிவர வேலை கிடைப்பதில்லை.

இதனால் தாங்கள் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தும் சூழ்நிலையில் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் இல்லை.

இந்த சூழலில் நுண்நிதி கடன் நிறுவனங்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்களை தவணை தவறாமல் வட்டியுடன் செலுத்த நிர்பந்திக்கின்றனர்.

கடன் தவணையை செலுத்தக்கோரி நிதி நிறுவனங்கள் வற்புறுத்தக் கூடாது. அவ்வா று கட்டாயப்படுத்தும் நிறுவனங்க ளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் 18001021080 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x